வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 170 மில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கியுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் நிலையான அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்காகவும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார்.
கண்ணிவெடியகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் இதுவரை 43 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.