Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாளை ஹட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டம்; இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு

நாளை ஹட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டம்; இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை (21) ஹட்டன் மல்லியப்பு சந்தியில் காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கின்ற அமைதிவழி போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையான ஆதரவை வழங்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

காணி உரிமைக்கான தினம் என்பது ஒரு கொண்டாட்டம் அல்ல! இது-நமது உரிமைக்காக, நமது நிலத்திற்காக, நமது வாழ்வாதாரத்திற்காக, நமது வரலாற்றுக்காக நாம் எழுப்பும் குரல் என்ற தொனிப்பொருளிலே நாளை (21) இந்த காணி உரிமைக்கான போராட்டமானது நடைபெறவிருக்கின்றது.

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் எமது மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமைக்கான அமைதிவழி போராட்டத்தில் மலையக மக்கள் இணைந்து கொள்ள வேண்டியது ஒரு வரலாற்றுத் தேவையாகும்.

இது தொடர்பான ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவிக்கையில்,

மலையக மக்களின் விடுதலைக்கு காணி உரிமை என்பது அடிப்படையானதாகும். காணி உரிமைதான் எமது மக்களை தலை நிமிர்ந்து வாழ வைக்கும். ஆகவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காணி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கி செயற்பட்டு வருகின்றமையை அனைவரும் அறிவார்கள்.

அந்த வகையில் நான் பாராளுமன்ற உறுப்பினராகிய நாள் தொடக்கம் தொடர்ச்சியாக பல்வேறு முறை இந்த மக்களின் காணி உரிமைக்காக பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் பலமாக குரல் கொடுத்து வருகிறேன். இந்தப் போராட்டம் கடைசி மலையைகத் தமிழனுக்கும் காணி உரிமை கிடைக்கும் வரை தொடரும்.

காணி உரிமை தொடர்பாக நான் அமைச்சராக இருந்தக் காலப்பகுதிகளில் இரண்டு அமைச்சரவை பத்திரங்களையும் சமர்ப்பித்திருந்தேன். மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸோடு

இனைந்து செயற்படுகின்ற அனைத்து சக்திகளையும் இனைத்துக்கொண்டு காணி உரிமை கோசத்தை இந்த நாடே கேட்கும் அளவிற்கு கொண்டுச்செல்ல வேண்டிய அவசியம் மலையக சமூகத்துக்கு இருக்கிறது .

ஆகவேதான், நாளை நடைபெறவிருக்கின்ற “காணி உரிமை தொடர்பான அமைதிவழி போராட்டத்திற்கு” இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குவதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால் தீக்குளிப்பேன்; உதய கம்மன்பில தெரிவிப்பு!

June 9, 2026
பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!
செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கம்?; அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு!

June 9, 2026
ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!
செய்திகள்

ஏற்றுமதி வருமானம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய உத்தரவு!

June 9, 2026
லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!
செய்திகள்

லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!

June 9, 2026
தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!
செய்திகள்

தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

June 9, 2026
ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
Next Post
கெஹெலிய ரம்புக்வெல்லவின் மக்கள் பிணையில் விடுதலை

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மக்கள் பிணையில் விடுதலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.