மாறிவரும் உலகிற்கு ஏற்ப எதிர்காலத்தில் இலங்கையில் பிள்ளைகள் ஹிந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார்.
நேற்று முன் தினம் புதன்கிழமை நுகேகொடையில் உள்ள அனுல வித்தியாலயத்தில் பரிசளிப்பு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- இலங்கையின் கல்வியானது எதிர்காலத்திற்கு ஏற்றவாறு பாரியளவில் மாற்றமடைய வேண்டும். நாம் புதிய பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும். மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு நமது பிள்ளைகள் ஆங்கிலத்துடன் கூடுதலாக சீன மற்றும் இந்தியையும் கற்கவேண்டும். தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய ஜெனரேஷன் ஆல்பாவிற்கு பொருந்தும் வகையில் புதிய பாடங்களை நாம் அறிமுகப்படுத்தவேண்டும். பாடசாலைகளில் மாணவர்கள் செல்போன்கள் மற்றும் போட்காஸ்ட்கள் மூலம் தங்கள் கல்வியைத் தொடரவேண்டும்.
மேலும், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மரபணு தொழில்நுட்பம், செயற்கை
நுண்ணறிவு மற்றும் தானியங்கியல் (ரோபோடிக்ஸ்) ஆகியவற்றை கற்பிக்க வேண்டும்.
புதிய தொழில்நுட்பம் எதிர்காலத்தில் ஒன்றரை டிரில்லியன்டொலர்களை உலகளாவிய வருவாயைக் கொண்டுவரும். அதில் ஒரு அங்கமாக இருப்பதைத் தவிர இலங்கைக்கு வேறு வழியில்லை-என்றார்.