நாட்டில் இயங்கிவரும் முறைசாரா முச்சக்கரவண்டி பயணிகள் போக்குவரத்து சேவையினால் சில முச்சக்கரவண்டி சாரதிகள் பயணிகளிடம் அநியாயமாக பணம் அறவிடுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
முச்சக்கரவண்டி சேவையை முறையான ஒழுங்குமுறைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதன் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலைமைகளை தவிர்க்க உரிய அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதமஸ்தானத்தை தரிசிக்க ரயிலில் வரும் பக்தர்களிடம் முச்சக்கரவண்டி சாரதிகள் அநியாயமாக பணம் அறவிடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து மீண்டும் முச்சக்கரவண்டி சேவை குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.