Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி; 04 புதிய அமைச்சர்கள் நியமனம்!

வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி; 04 புதிய அமைச்சர்கள் நியமனம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருநாள் விஜயமாக இன்று திங்கட்கிழமை (21) சிங்கப்பூர் செல்லவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சுற்றுப்யணத்தின் போது, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யெகோப் (Halimah Yacob) ஐ சந்தித்து கலந்துரையாடவுள்ளதோடு, சிங்கப்பூர் பிரதமர் லீ சியேன் லுங் (Lee Hsien Loong), சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் நெங் ஹெங் ஹென் (Ng Eng Hen), நிலைபேறு மற்றும் சுற்றாடல் அமைச்சர் கிரேஸ் பூ ஹாய் இயன் (Grace FU Hai yien) ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

பெரிஸ் உடன்படிக்கையின் 6ஆவது உறுப்புரை, சர்வதேச கார்பன் வர்த்தகத்தின் கீழ் பசுமை வீட்டு வாயு வெளியேற்றத்தை மட்டுப்படுத்தும் நோக்கத்துடன் குறைந்த செலவில் ஒத்துழைப்புக்களை பரிமாறிக்கொள்ள இரு நாடுகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிங்கப்பூர் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்னர் பெரிஸ் உடன்படிக்கைக்கு அமைவாக கார்பன் சீர்ப்படுத்தல் தொடர்பில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் அரசாங்கங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஆகியோரும் சிங்கப்பூர் சுற்றுப் பயணத்தில் இணைந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், ஜனாதிபதி வெளிநாட்டிலிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களை கண்காணிப்பதற்காக பதில் அமைச்சர்கள் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய ஜனாதிபதி வெளிநாட்டிலிருக்கும் இன்று (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆகிய தினங்களில் அமுலாகும் வகையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பாதுகாப்பு பதில் அமைச்சராகவும், நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை பதில் அமைச்சராகவும், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தொழில்நுட்ப பதில் அமைச்சராகவும், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனூப பெஸ்குவல், சிறுவர் , மகளிர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

விலங்குகளுக்கு மட்டும் பரவக்கூடிய ஷமொண்டா வைரஸ் மனிதனிடம் கண்டுபிடிப்பு; பிரான்ஸில் ஒருவர் உயிரிழப்பு!
உலக செய்திகள்

விலங்குகளுக்கு மட்டும் பரவக்கூடிய ஷமொண்டா வைரஸ் மனிதனிடம் கண்டுபிடிப்பு; பிரான்ஸில் ஒருவர் உயிரிழப்பு!

October 22, 2026
இளம் பெண் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு; NPP உறுப்பினர் கைது!
செய்திகள்

இளம் பெண் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு; NPP உறுப்பினர் கைது!

October 22, 2026
ஏறாவூர் வைத்திய அத்தியட்சகரின் கருத்துக்கு ஹரீஸ் எம்.பி. கடும் கண்டனம்; உடனடியாக இடமாற்றவும் கோரிக்கை
செய்திகள்

ஏறாவூர் வைத்திய அத்தியட்சகரின் கருத்துக்கு ஹரீஸ் எம்.பி. கடும் கண்டனம்; உடனடியாக இடமாற்றவும் கோரிக்கை

October 22, 2026
தெதுறு ஓயாவின் நீர்மட்டம் உயர்வு; வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

தெதுறு ஓயாவின் நீர்மட்டம் உயர்வு; வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை!

October 22, 2026
தந்தையைக் கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை; திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை; திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

October 22, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கும் அதிக மழை எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கும் அதிக மழை எச்சரிக்கை!

October 22, 2026
Next Post
நிலவில் மோதியது லூனா 25!

நிலவில் மோதியது லூனா 25!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.