உலகில் கொரோனா வைரஸ் மாறுபாடு பரவ ஆரம்பித்துள்ள நிலையில், அதன் திரிபானது பிரித்தானியாவிலும் நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய புதிய கொரோனா வைரஸினுடைய மாறுபாடானது பீ.ஏ.2.86 அல்லது பைரோலா என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், புதிய வைரஸின் தாக்கம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வைரஸானது தனது புரத அமைப்பில் 30 மாறுபாடுகளைக் கொண்டுள்ளதாகவும் இதன் காரணமாக வேகமாக பரவக்கூடும் என்பதுடன், ஏற்கனவே வழங்கப்பட்ட தடுப்பூசியின் தாக்கத்தை தாண்டி தொற்றை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.