தம்புள்ளை அவுரா அணியை ஐந்து விக்கெட்டுகளால் தோற்கடித்த கண்டி அணி லங்கா பிரீமியர் லீக் கிண்ணத்தினை கைப்பற்றியது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி 4 விக்கெட்டுக்கு 147 ஓட்டங்களை எடுத்தது.
பதில் இன்னிங்ஸை விளையாடிய கண்டி அணி 19.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
போட்டியின் ஆட்ட நாயகனாக ஏஞ்சலோ மத்தியூஸ் தெரிவானதோடு, துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் சிறந்து விளங்கிய வனிந்து ஹசரங்க போட்டியின் நாயகனாகவும் தெரிவானார்கள்.