வடகிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதிகோரியும் மட்டக்களப்பில் எதிர்வரும் 30ஆம் திகதி மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வடகிழக்கு மாகாண 08 மாவட்ட சங்கங்களும் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளது.