காலநிலை கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை தொடர்பில் மேம்பட்ட தகவல்களை பெறும் வகையில் சீன நிறுவனம் புதிய செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியுள்ளது.
ஜியுகுவான் ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச்-4சி என்னும் ராக்கெட் கோபேன்-12 04 என்ற செயற்கைக்கோளை சுமந்தப்படி வானிற்குள் பறந்தது.
பின்னர் திட்டமிட்டபடி அதன் சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.
நில அளவீடு, நகர்புற வளர்ச்சியை தீர்மானம், விளைபொருட்கள் மதிப்பீடு உள்ளிட்ட திட்டங்களுக்கு இந்த செயற்கைக்கோள் பயன்பட உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.