மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதி இராணுவ முகாமில் பணிபுரியும் விஷான் பிரதீப் விதானச்சி என்ற இராணுவவீரரின் சிதைந்த நிலையிலான சடலம் குருசிங்ககொடை பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளது.
35 வயதான அவர் கடந்த 14ஆம் திகதி விடுமுறை கழிந்து வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அதன்பின்னர் கடந்த காலப்பகுதியில் அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை எனவும் உறவினர்கள் மற்றும் பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.
கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட அச் சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.