நேற்று முன்தினம் மயிலதமடு மாதவனை பகுதிக்கு பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் நேரடி களவிஜயம் மேற்கொண்டு ஆராயச்சென்ற சமயத் தலைவர்கள் (இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம்) மற்றும் ஊடகவியலாளர்களை பெரும்பான்மை இன புல்லருவ ஞானானந்த ஹில்மி தேரர் மற்றும் சட்டவிரோதமாக மயிலைத்தமடு மாதவனை பகுதிகளில் குடியேறும் பெரும்பான்மை மக்களால் சிறைபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பில் நேற்றையதினம் மட்டு ஊடக அமையத்தில் சிறைபிடிக்கப்பட்ட 3 ஊடகவியலாளர்களும் இது குறித்து முழுமையான தகவலை வழங்கியிருந்தனர். பௌத்த மதகுருவாலும் பேரினவாத தரப்பினராலும் தொலைபேசிகள் பறிக்கப்பட்டு சமயத்தலைவர்களை தாக்கவும் முற்பட்டுள்ளனர். அத்தோடு குறித்த பௌத்த மதகுரு இஸ்லாமிய மௌலவியையும் தகாத வார்த்தைகளை பிரயோகித்து கடுமையாக பேசியிருந்தார் எனவும் குறிப்பிட்டு இருந்தனர்.