Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி – இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதி – இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் அதன் குறிக்கோள் குறித்தும், பொருளாதார அபிவிருத்திக்காக அரச மற்றும் தனியார் துறைகள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பது குறித்தும் வர்த்தக சமூகத்திற்கு அவசியமான வசதிகளை வழங்குதல் பற்றியும் இங்கு விளக்கிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலக்கு மயப்பட்டதும், அந்த இலக்குகளை அடைய கொள்கைகளை சீரமைப்பதன் மூலமும், இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குதல், சமூக நல்வாழ்வு மற்றும் சுற்றாடல் நிலைபேற்றுத்தன்மையை போசித்தல் ஆகியவற்றின் ஊடாக நாட்டை வளமான எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்வதற்கு பங்களிக்குமாறும் தெரிவித்தார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகள் சபை, இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பு மற்றும் அது பற்றிய நோக்கு, எதிர்கால வேலைத்திட்டங்கள் மற்றும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கிரிஷான் பாலேந்திர, உப தலைவர் பிங்குமால் தெவரதந்திரி, பிரதி உப தலைவர் வினோத் ஹைதிராமணி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Tags: BattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்
செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

June 7, 2026
கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு
செய்திகள்

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு

June 7, 2026
Next Post
அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு

அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு