Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் விபரம் வெளியாகியது; 18 பேரா?

பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் விபரம் வெளியாகியது; 18 பேரா?

3 years ago
in சினிமா, செய்திகள்

பிக் பாஸ் ரசிகர்களை கவரும் விதமாக அதிரடி ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு மீண்டும் ரசிகர்களை பிக் பாஸ் நிகழ்ச்சி பக்கம் கொண்டு வரும் முயற்சியில் பல வித்தியாசங்களையும் பிரபல நடிகர்களையும் களமிறக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில சீசன்களாக பரிட்சையம் இல்லாத நபர்கள் பிக் பாஸ் வீட்டில் நுழைந்ததால் தான் ரசிகர்கள் பெரிதும் கனெக்ட் ஆகவில்லை என்றும் டிஆர்பி குறைந்து விட்டதாகவும் கூறினர்.

இந்நிலையில், இந்த முறை பிக் பாஸ் வீட்டையே இரண்டாக மாற்றியது மட்டுமின்றி அப்பாஸ், சோனியா அகர்வால் போன்ற பல பிரபலங்களையும் பிக் பாஸ் போட்டியாளர்களாக களமிறக்கப் போவதாக ஹாட் அப்டேட்கள் கிடைத்துள்ளன.

மல்ஹாசன் டபுள் ஆக்‌ஷன் கொடுத்து அதிரடி ப்ரோமோவில் நடித்த நிலையில், நேற்று வெளியான அந்த ப்ரோமோ டிரெண்டாகி வருகிறது. வரும் அக்டோபர் முதல் வாரத்திலேயே பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை தான் நிகழ்ச்சியை ஆரம்பிப்பார்கள் என்பதால், அக்டோபர் 8ம் தேதியே பிக் பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் ஆரம்பம் ஆகும் என்பது உறுதியாகி உள்ளது. விரைவில் அதுதொடர்பான அறிவிப்பை விஜய் டிவி அறிவிக்கும் என தெரிகிறது.

பிக் பாஸ் சீசன் 7 மொத்தம் 105 நாட்கள் நடக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்த முறை ஒட்டுமொத்தமாக 18 போட்டியாளர்கள் ஆரம்பத்திலேயே பிக்பாஸ் ஆரம்ப நிகழ்ச்சியிலேயே அந்த வீட்டுக்குள் செல்லப் போவதாக கூறுகின்றனர். போட்டியாளர்களின் பெயர்கள் குறித்த தகவல்களும் தற்போது கசிந்துள்ளன.

இந்த சீசனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற இந்த 18 போட்டியாளர்கள் தான் தேர்வாகி உள்ளதாக ஒரு தகவல் லீக் ஆகியுள்ளது.

  1. அப்பாஸ்
  2. சோனியா அகர்வால்
  3. ரஞ்சித் – பாலிமர் செய்தியாளர்
  4. சந்தோஷ் பிரதாப்
  5. தர்ஷா குப்தா
  6. விஜே பார்வதி
  7. ரேகா நாயர்
  8. அம்மு அபிராமி
  9. விஜே ரக்‌ஷன்
  10. ஜாக்குலின்
  11. ஷர்மிளா – பஸ் டிரைவர்
  12. பப்லு
  13. காக்கா முட்டை விக்னேஷ்
  14. கல்லூரி அகில்
  15. நிலா – மாடல்
  16. தினேஷ் – ரச்சிதா கணவர்
  17. ஸ்ரீதர் மாஸ்டர்
  18. ரவிக்குமார் – மாடல் என பேர் பட்டியல் வலம் வருகின்றன. ஆனால், இதில் சிலர் கன்ஃபார்ம் என்றும் சில பெயர்களில் மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.கூடிய சீக்கிரமே உறுதியான போட்டியாளர்கள் லிஸ்ட் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஏகப்பட்ட பிரபலங்கள் பெயர் இந்த முறை அடிபட்டு வரும் நிலையில், அவர்கள் அத்தனை பேரும் மிஸ் ஆகாமல் வந்தால், மீண்டும் டிஆர்பியில் முதலிடத்தை பிக் பாஸ் நிகழ்ச்சி பெறும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
ரயிலுக்குள் சிலிண்டர் வெடித்து 9 பேர் மரணம்; இந்தியாவில் சம்பவம்!

ரயிலுக்குள் சிலிண்டர் வெடித்து 9 பேர் மரணம்; இந்தியாவில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.