அகில இலங்கை ரீதியில் பாடசாலைகள் மட்டத்தில் நடத்தப்பட்ட பழுதூக்கும் போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் இருவர் மற்றும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர் ஒருவரும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரணையுடன் கடந்த 26,27 திகதி கொழும்பில் இடம்பெற்ற பழுதூக்கும் போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் டரில் ஸ்டீபன் 18 வயதுக்குட்பட்ட 74 கிலோ எடைப்பிரிவில் 155 கிலோவைத் தூக்கி தங்க பதக்கத்தை வென்றுள்ளதுடன் அதே பாடசாலையில் கல்வி பயிலும் A .ரிஷிகேஷ் என்னும் மாணவனும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
அத்தோடு, மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் செல்வராஜா அக்ஸயன் 20 வயதுக்குட்பட்ட 59 எடைப் பிரிவில்,110 கிலோ எடையினை தூக்கி தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.
அதேசமயம் இம் மூன்று மாணவர்களும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் உள்ள Batticaloa empires விளையாட்டு கழகத்தினால் பயிற்சிகளை பெற்றிருப்பதுடன் அதே போட்டியில் கலந்து கொண்ட மட்/ புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மாணவன் Y.சத்தீஸ்காந்த் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளார்.