தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்களாகியும் இதுவரை மக்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
காணிப்பிரச்சினையை தீர்த்து காணி உறுதிப்பத்திரம் வழங்கினால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டுமொத்த பெருந்தோட்ட மக்களின் முழு ஆதரவையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
நாவலப்பிட்டி நகரில் இடம்பெற்ற மலையகம் 200 என்ற நூல் வெளியீட்டு விழாவில் அதிதியாக கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், “பெருந்தோட்ட மக்கள் இந்த நாட்டிற்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவோ, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவோ இந்த நாட்டில் எந்த ஆட்சியாளர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று சுட்டிக்காட்டினார்.