மகிந்தவின் மகன் சீனாவில் ராக்கெட் செய்வதற்காக முந்நூற்று முப்பத்திரண்டு மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டதாக பல சர்ச்சைகளை கொண்ட தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது சுப்ரீம்சாட் (பிரைவேட்) லிமிடெட் எனும் குறித்த நிறுவனம் ரோஹித ராஜபக்சவுக்கு சொந்தமானது அல்ல என்றும், இது சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ் இற்கு சொந்தமான துணை நிறுவனமாகும் என்றும் கூறியுள்ளது. மேலும் இது குறித்து அந்த நிறுவனம் தெரிவிக்கையில்,
பிரதான தொழில்நுட்ப பணிப்பாளர்
இந்த திட்டம் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஒரு தனியார் முதலீடாக செய்யப்பட்டது. ரோஹித ராஜபக்ச நிறுவனத்தின் ‘பிரதான தொழில்நுட்ப பணிப்பாளர்’ பதவியில் பணியமர்த்தப்பட்டார்.
ஆனால் அவர் அப்போதைய ஜனாதிபதியின் மகன் என்பதால் தேவையற்ற விளம்பரங்கள் மற்றும் தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன.
இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக நாம் உருவாக்கிய மாபெரும் வாய்ப்பை குறுகிய அரசியல் இலக்குகளுடன் அழித்து கடந்த தசாப்தத்தில் பொய்யான பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன என மேலும் தெரிவித்துள்ளது.