Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒமெக்ரோனின் புதிய வகை திரிபு தொற்றிய முதல் நோயாளி பிரான்ஸில்!

ஒமெக்ரோனின் புதிய வகை திரிபு தொற்றிய முதல் நோயாளி பிரான்ஸில்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஒமெக்ரோன் வைரஸ் குடும்பத்தின் பிஏ2. 86 என்ற உப திரிபு தொற்றிய முதலாவது நோயாளி பிரான்ஸில் பரந்த கிழக்குப் பிராந்தியத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொதுச் சுகாதாரத் துறையை ஆதாரம் காட்டி செய்தி ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டிருக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொரோனா தடுப்பூசிகளாலும் ஏற்கனவே ஏற்பட்ட தொற்றுக்களினாலும் மனித உடல் பெற்றுக் கொண்ட நோய் எதிர்ப்புச் சக்தியை மீறிப்பரவக் கூடியது என்று நம்பப்படுகின்ற ஆபத்தான இந்தத் திரிபை உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்கத் தொற்றுநோய்த் தடுப்புத் துறையைச் சார்ந்த நிபுணர்கள் மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில்’பைரோலா’ எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்ற இந்தப் புதிய உப-திரிபு கடந்த மாத நடுப்பகுதியில் அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல், இங்கிலாந்து,டென்மார்க் போன்ற நாடுகளில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு ஸ்பெயினிலும் பரவுவது தெரிய வந்தது.

பைரோலா திரிபு மிக அதிக எண்ணிக்கையான பிறழ்வுகளைக் கொண்டிருப்பதால் நோய்க்காப்புச் சக்திக்குத் தப்பி வேகமாகப் பரவக் கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

எனினும் உலகெங்கும் கோவிட் வைரஸ் திரிபுகளின் மரபுவரிசைகளை ஆய்வுசெய்து கண்காணிக்கின்ற செயற்பாடுகள் கைவிடப்பட்டு விட்டதால் சர்வதேச அளவில் பைரோலா தொற்று பற்றிய தரவுகள் போதுமான அளவு பெறப்படவில்லை.

பிஏ2. 86 திரிபின் (பைரோலா) தாக்கம் என்ன என்பது இன்னமும் தெரியவராத ஒன்றாகவே உள்ளது எனக் குறிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம், கண்காணிப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்தும் விழிப்பாகச் செயற்படுமாறு நாடுகளைக் கேட்டிருக்கிறது.

குளிர்காலம் ஆரம்பமாகவுள்ள சமயத்தில் பைரோலா மூலம் நாட்டில் புதிய தொற்றலை உருவாகலாம் என்று பிரான்ஸின் பொதுச் சுகாதாரத்துறை எதிர்பார்த்துள்ளது.

புதிய திரிபு வைரஸ் குறித்து இந்தக் கட்டத்தில் உடனடியாக அச்சப்பட எதுவும் இல்லை.தொற்று ஏற்பட்டால் கட்டாய தனிமைப்படுத்தல் விதிகள் எதுவும் தற்சமயம் அமுலில் இல்லை. பொது அறிவின் அடிப்படையில் தங்களைத் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்வதும் வயோதிபர்கள், குழந்தைகள்,தீவிர நோயாளிகளை நெருங்குவதைத் தவிர்த்துக் கொள்வதும் அவசியம் . கடுமையான நோய் அறிகுறிகள் இருந்தால் அன்றிப் பணியிடங்களுக்குச் செல்வதற்குத் தடை இல்லை. தேவை ஏற்பட்டால் மருத்துவரை அணுகி வழக்கமான சுகயீன லீவு பெற்றுக்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
Next Post
ஜப்பான் பிரதமர் இலங்கை வருகிறார்?

ஜப்பான் பிரதமர் இலங்கை வருகிறார்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.