இரண்டாம் இணைப்பு
மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
மருத்துவ தேவைக்காக கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், ஆயுர்வேத சட்டக் கோவையின் வர்த்தமானி அறிவித்தல் மூலம் எதிர்காலத்தில் இது குறித்து அறிவிக்கப்படும் என்றும் உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி கடந்த 05.09.2023 அன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கஞ்சா பயிர்ச்செய்கைக்கு வணிகப் பயிராக ஊக்குவிப்பதாகவும், மேலும் சில மருந்துகளை வணிகப் பயிர்களாக ஊக்குவிக்க வேண்டும், இல்லையெனில் பாரம்பரிய மருத்துவம் மறைந்துவிடும் என்றும் அவர் கூறினார். ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
பொரளை ஆயுர்வேத வைத்தியசாலையின் பெயர் ஆயுர்வேத தேசிய வைத்தியசாலை என திருத்தப்படவுள்ளதாகவும், ஆயுர்வேத திணைக்களத்தை வினைத்திறனாக்கும் வகையில் ஆயுர்வேத ஆணையாளர் பதவி இந்த சட்டத்தின் மூலம் ஆயுர்வேத ஆணையாளர் நாயகமாக தரமுயர்த்தப்படும் எனவும் உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.