உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சிங்கள கிறிஸ்தவர்கள், தமிழ் கிறிஸ்தவர்கள், தமிழ் முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் எந்த பாதிப்பும் இடம்பெறவில்லை என முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறுநேசன் இன்று மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இது தொடர்பில் தெரிவித்த அவர் நாங்கள் சிங்கள பௌத்தர்கள் பாதிக்கப்பட வேண்டும் என்று சொல்லவில்லை ஆனால் இங்கே ஒரு அடிப்படை வாதம் இருக்கின்றது என்பதையே நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று கூறினார்.
இது தொடர்பான முழு நீள காணொளி