Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் விபரம் வெளியாகியது; 18 பேரா?

அடுத்த மாதம் ஆரம்பமாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா!

3 years ago
in சினிமா, செய்திகள்

பிக் பாஸ் முதல் சீசனில் நடிகர் கமல்ஹாசனுக்கு சம்பளமாக 6 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசனின் சம்பளம் 100 கோடி ரூபாயை தாண்டி உள்ளதாக கூறுகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த 6 வருடங்களுக்கு முன்னதாக தொகுத்து வழங்க ஆரம்பித்த கமல்ஹாசன் சினிமா ஷூட்டிங், அரசியல், பிசினஸ் என பல விஷயங்களில் பிஸியாக இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விடுவதாக இல்லை.

அடுத்த மாதம் ஆரம்பிக்க உள்ள 7வது சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கப் போகிறார். அதற்கான புரோமோ வீடியோக்களும் சமீபத்தில் வெளியாகின. அதில் இந்த முறை பிக் பாஸ் வீடு இரண்டு வீடாக மாறப் போவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். மேலும், போட்டியாளர்கள் குறித்த உத்தேச பட்டியல்களும் சோசியல் மீடியாவில் வலம் வந்த வண்ணம் உள்ளன.

பல சினிமா பிரபலங்களின் பெயர்களும் இந்த முறை அடிபட்டு வருகிறது. நடிகர் அப்பாஸ், நடிகை சோனியா அகர்வால், விஜய் டிவி ஜாக்குலின், நடிகர் பப்லு, ரேகா நாயர், விஜய் டிவி ரக்சன், விஜய் டிவி குரேஷி, ரக்ஷிதா கணவர் தினேஷ் என பல போட்டியாளர்களின் பெயர்களும் அடிபட்டு வருகின்றன.

முன்னதாக நடிகை கிரண் மற்றும் ஷகிலா பெயர்கள் அடிபட்ட நிலையில், அந்த இருவருமே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்று வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசனுக்கு சம்பளமாக சுமார் 130 கோடி வழங்கப்பட உள்ளதாக அப்போது வியக்க வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடிகர் பிரபாஸின் கல்கி திரைப்படத்தில் நடிக்க கமலுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது ஒட்டுமொத்த திரை துறையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தது குறிப்பிடத்தது.

இந்நிலையில் பிக்பாஸ் முதல் சீசனுக்கு வெறும் 6 கோடி ரூபாய் சம்பளமாக கமலுக்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போது 150 கோடி ரூபாயை பிக் பாஸ் தீம் கொடுக்க போவதாக வெளியாகி உள்ள தகவல்கள் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைவிட கூடுதலாக அந்த நிகழ்ச்சியின் மூலம் வரும் வருமானத்தில் ஒரு பங்குதாரராக மாறுவதற்காக கமல் முயற்சி செய்தார் என்றும் அப்படி மாறினால் பெரிய தொகையை கொடுக்க வேண்டிய நிலை இருக்கும் என்பதால் அதற்கு பதிலாகத்தான் 130 கோடி சம்பளத்தை கொடுத்து கமலை பிக் பாஸ் டீம் ஆப் செய்து விட்டதாக தற்போது பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
அனைத்து அரசு பரிவர்த்தனைகளும் மார்ச் 2024க்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும்!

அனைத்து அரசு பரிவர்த்தனைகளும் மார்ச் 2024க்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.