Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மணிரத்தினத்துடன் இணையப்போகும் கமல்-ஜெயம் ரவி!

மணிரத்தினத்துடன் இணையப்போகும் கமல்-ஜெயம் ரவி!

3 years ago
in சினிமா, செய்திகள்

Jayam Ravi (ஜெயம் ரவி) கமல் ஹாசனும், மணிரத்னமும் இணையும் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

கமல் ஹாசன் என்றாலே உழைப்பு, வித்தியாசம், புதுமை என்று பெயர் எடுத்தவர். அவரது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு புதுமையையோ, வித்தியாசத்தையோ இடம்பெற செய்துவிடுவார். அதனால்தான் எத்தனை இயக்குநர்கள் வந்தாலும் நாங்கள் இப்போது செய்வதை கமல் சார் அப்போதே செய்துவிட்டார் என்று ஏகத்துக்கும் புகழ்வார்கள்.

நடிப்பு மட்டுமின்றி அவர் இயக்கிய விருமாண்டி, ஹேராம் ஆகிய படங்களும் இன்றுவரை தமிழ் சினிமாவின் பெஞ்ச் மார்க்காக இருக்கின்றன. குறிப்பாக விருமாண்டி படத்தின் திரைக்கதை புதுமையிலும் புதுமையாக இருந்தது. ஒரே கதையை இரண்டு பேர் தங்களது பார்வையில் விவரிக்கும் மாயாஜாலத்தை முதல்முதலில் திரையில் நிகழ்த்திக்காட்டியவர் கமல் ஹாசன்.

விக்ரம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தை அடுத்து சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் கமல்.அந்தவகையில் படங்களை தயாரிக்கவும் செய்யும் அவர் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலும், ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். ஹெச்.வினோத் – கமல் படம் தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியானது.

கமல் ஹாசனின் அடுத்தடுத்த படங்களில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருப்பது அவரும் மணிரத்னமும் இணையும் படம்தான். ஏற்கனவே இவர்கள் இணைந்து காலத்தால் அழிக்க முடியாத க்ளாசிக்காக நாயகன் படத்தை கொடுத்தனர். எனவே இந்தப் படத்தின் மீதான ஆவல் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. தற்போது திரைக்கதை எழுதும் பணியில் மணிரத்னம் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. படத்தில் யார் யார்?: இந்தச் சூழலில் இருவரும் இணையும் படத்தில் சிம்பு முக்கியமான ரோலில் நடிக்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அண்மையில் வெளியான தகவலின்படி சிம்பு நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது.

இந்நிலையில் இந்தப் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஜெயம் ரவி முக்கியமான ரோலில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் தெரிகிறது. இதற்கிடையே பிரபாஸ் நடிக்கும் கல்கி ஏடி 2898 படத்தில் வில்லனாகவும் கமல் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
Next Post
சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் யாழ் இளைஞன்!

சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் யாழ் இளைஞன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.