2023 ஆசிய கிண்ணத் தொடரின் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் 41 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றது.
இப்போட்டியில் இலங்கை அணி சார்பில் அதிரடி பந்து வீச்சில் ஈடுபட்ட இளம் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகே தனது 10 ஓவர்கள் நிறைவில் 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய இந்திய அணிக்கு சவாலாக அமைந்தார்.
அதேபோல், சரித் அசலங்க 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழத்தினார்.
இந்திய அணி சார்பில் அணித் தலைவர் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 57 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இஷான் கிஷான் 33 ஓட்டங்களையும், கே.எல் ராஹுல் 39 ஒட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
அதன்படி, 214 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் துனித் வெல்லாலகே அதிகபட்சமாக 42 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டார்.
தனஞ்சய டி சில்வா 41 ஓட்டங்களையும் சரித் அசலங்க 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.