சவுக்கடியில் வியாழேந்திரனின் சொல்லை நம்பி குடியேறிய மக்கள் இன்று நடுத்தெருவில் நிற்க வேண்டிய துர்ப்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் அவர்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவினை அடுத்து அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பெரும் இக்கட்டான நிலையில் இருக்கின்றார்கள். இது தொடர்பாக உரியவர்களிடம் தொடர்பு கொண்ட போதும் அவர்களிடமிருந்து முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை என அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் இருந்து பெறப்பட்ட காணொளி ஒன்றும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.