Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்; சீமான் கண்டனம்!

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்; சீமான் கண்டனம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலையில் தமிழ் மக்களால் உருவாக்கப்பட்டிருந்த திலீபன் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி மீது சிங்களக் காடையர்கள் தாக்குதல் நடத்தி அதனை சிதைத்துள்ளனர்.

மேலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் அவரது கட்சி செயற்பாட்டாளர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையானக் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்ததாவது,

ஈழ விடுதலையில் ஆயுதப் போராட்டத்தின் அறத்தினையும், அவசியத்தினையும் தனது அகிம்சை போராட்டத்தின் மூலம் உலகிற்கு உணர்த்திய விடுதலைப் போராளி திலீபனின் ஈகத்தினைக்கூட நினைவு கூரக்கூடாது என்று விடுதலைப்போர் மெளனிக்கப்பட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகும் சிங்களக் காடையர்களை ஏவி இலங்கை அரசு திலீபன் நினைவேந்தலைத் தடுத்து நிறுத்துமாயின் தமிழர்கள் மீதான சிங்கள இனவெறி மனப்பான்மை என்றைக்கும் மாறாது என்பதற்கு இக்கொடும் நிகழ்வு மற்றுமொரு சான்றாகும்.

இனவாத அரசாங்கத்தின் இராணுவ முகாம் எதிரில் சிங்கள பொலிஸார் முன்னிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல், சனநாயக முறையில் தமிழர்கள் ஒருபோதும் உரிமையைப் பெற்றுவிட முடியாது என்பதையே மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் அற்ப அரசியலைப்பு திருத்தங்கள் மூலம் அனைத்து உரிமைகளையும் தமிழர்கள் பெற்று வாழ்ந்திட முடியும் என்ற வரலாற்று பொய்யினை பன்னாட்டு அரங்கில் மீண்டும் மீண்டும் முன் வைக்கும் இந்திய ஒன்றிய அரசாங்கம் இப்போதாவது இனவாத இலங்கை அரசைக் கண்டிக்க வாய் திறக்குமா?

இலங்கையில் தமிழ் மக்களின் சனநாயக பிரதிகளின் மீதான வன்முறை தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெறும் நிலையில் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசாங்கம் அதனை அமைதியாக வேடிக்கைப் பார்ப்பது ஏன்? இதுதான் இந்தியா தமிழர்களுக்கான உரிமையைப் பெற்றுத்தரும் முறையா?

தமிழ்நாட்டினை ஆளும் திமுக அரசாங்கம் வழக்கம்போல் கடந்து செல்லாமல் உடனடியாக, ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனவாத அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்த இந்திய ஒன்றிய அரசினை வலியுறுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்!

நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.