Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திலீபனின் நினைவேந்தல் ஊர்திக்கு தடை உத்தரவு கோரிய பொலிசார்; நீதிமன்றம் மறுப்பு!

திலீபனின் நினைவேந்தல் ஊர்திக்கு தடை உத்தரவு கோரிய பொலிசார்; நீதிமன்றம் மறுப்பு!

3 years ago
in செய்திகள்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிசார் தடை கோரி வவுனியா நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த போதும், நீதிமன்றம் அதனை நிராகரித்து, குழப்பங்கள் ஏற்படாத வகையில் பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறு இன்று(18) உத்தரவு பிறத்துள்ளது.

தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால்”திலீபன் வழியில் வருகின்றோம்” என்னும் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியானது பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு, திருகோணமலையில் வலம் வந்த போது சிங்கள இனத்தைச் சேர்ந்த குழு ஒன்றினால் தாக்கப்பட்ட நிலையில் வவுனியாவை வந்தடைந்தது.

குறித்த ஊர்திப் பவனி வவுனியாவில் இடம்பெற்றால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதுடன், இன நல்லுறவு சீர்குலையும் என இருவர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர். குறித்த முறைப்பாட்டுக்கு அமைய இவ் ஊர்திப் பவனிக்கு பொலிசார் வவுனியா நீதிமன்றில் தடை உத்தரவு கோரியிருந்தனர்.

அதனை கவனத்தில் எடுத்த மன்று, இறந்தவர்களை நினைவு கூரும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்பதை சுட்டிக் காட்டி, பொலிசாரின் கோரிக்கையை நிராகரித்ததுடன், இன முரண்பாடுகள் மற்றும் குழப்பங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்
செய்திகள்

பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்

June 7, 2026
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
Next Post
மட்டு சந்திவெளியில் விபத்து!

மட்டு சந்திவெளியில் விபத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு