Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காடையர்களால் துரத்தி துரத்தித் தாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்!

திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி மீது தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு சட்ட நடவடிக்கை!

3 years ago
in முக்கிய செய்திகள்

தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 14 பேர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை – சர்தாபுர பகுதியில் நேற்றையதினம்(17) இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில், திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இன்று (18) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை – கொழும்பு வீதியினூடாக வாகனம் ஒன்றில் திலீபனின் உருவ சிலையை கொண்டு வரும்போது சர்தாபுர பகுதியில் வைத்து வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தியதுடன் வாகனத்தில் வந்த நபர்களை தாக்கியதாகவும் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் இரண்டு பெண்கள் அடங்குவதாகவும், அவர்கள் 35இற்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் மீது ஆறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த உள்ளதாகவும் தெரிய வருகின்றது

தொடர்புடையசெய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
Next Post
இலங்கையின் தோல்வி மோடிக்கு வழங்கப்பட்ட பிறந்தநாள் பரிசா? ; ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி!

இலங்கையின் தோல்வி மோடிக்கு வழங்கப்பட்ட பிறந்தநாள் பரிசா? ; ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு