பாசிக்குடா கடற்கரைக்கு செல்பவர்கள் அதனை அண்மித்த கற்பாறைகள் அமைந்திருக்கும் இடத்துக்கு
சென்று நீராடுவதனையோ, காலை நனைப்பதனையோ தவிர்ந்து கொள்வது சிறந்தது என சமூக வலைத்தளத்தில் செய்தியொன்று பகிரப்பட்டு வருகிறது.
பாறைகளுக்கு அருகில் நீரினுள் சில விஷ பூச்சிவகையால் தீண்டப்பட்டு பலர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறித்த நபர்கள் வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் அவதியுறுவதாகவும் அறியமுடிகிறது.
அங்குள்ள கற்பாறைகள் அமைந்திருக்கும் இடத்துக்கு செல்பவர்கள் கடலினுள் இறங்குவதனை தவிர்ந்து கொள்வது சிறந்தது.