Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கச்சதீவையும் விட்டுவைக்காத பெளத்த மயமாக்கல்;ஒப்பந்தத்தை மீறியது இலங்கை!

கச்சதீவையும் விட்டுவைக்காத பெளத்த மயமாக்கல்;ஒப்பந்தத்தை மீறியது இலங்கை!

2 years ago
in முக்கிய செய்திகள்

கச்சதீவில் மர்மமான முறையில் கடற் படையினரால் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

கச்சதீவு இலங்கை – இந்திய பக்தர்கள் வருடம் தோறும் ஒன்று கூடி அந்தோனியாரை வழிபட்டு செல்லும் ஒரு புனித பூமியாக காணப்படுகின்றது .

இந்நிலையில், தற்போது அங்கு இரகசியமாக புத்தர் சிலை வைத்துள்ளமை இந்திய – இலங்கை உறவில் விரிசலை ஏற்படுத்த கூடும் என அருட்பணி விமல சேகரன் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் இலங்கை படையினர் கச்சத்தீவையும் விட்டு வைக்காது, அங்கேயும் பாரிய புத்தர் சிலையொன்றை பிரதிஸ்டை செய்துள்ளார்கள்.

இவ்வாறான நிலையில், இது வரை காலமும் இந்திய இலங்கை பக்தர்கள் மட்டுமே திருவிழாவில் கலந்து கொண்டிருந்த நிலையில், இந்த வருடம் புதிதாக பௌத்த பிக்குகள் குழு ஒன்றும் கச்சதீவிற்கு சென்றிருந்தைமையும் தற்போது பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மேலும் கச்சதீவில் 5 முதல் 10 கடற்படையினரே கடமையில் இருக்கின்ற நிலையில், இவ்வாறு பிரமாண்டமாக புத்தர் சிலை கட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சதீவில் அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அதனைத் தவிர நிரந்தரமான கட்டடங்கள் எவையும் அமைக்க கூடாது என ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில், அங்கு கடற்படையினருக்கான இருப்பிடம் கூட நிலையானதாக அமைக்கபட்டிருக்கிறது.

இது ஒப்பந்த யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம். ஆனால் அந்த ஒப்பந்தத்தையும் மீறி தற்போது நிரந்தரமான பௌத்தமயமாக்கலுக்கான ஒரு திட்டமாக பாரியளவில் புத்தர் சிலை ஒன்று இரகசியமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, அந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியை சூழ மிக உயரமான கம்பிகள் பாவித்தும் பனை ஓலை வேலி அமைத்து மிக மிக இரகசியமாக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தள்ளன.

அண்மையில் நடைபெற்ற திருவிழாவின் போதும் அங்கு சென்ற கிறிஸ்தவ மதகுருமாரையோ, பக்தர்களையோ மற்றும் ஊடகவியலாளர்களையோ குறித்த இடத்திற்கு அருகில் கூட செல்ல கடற்படையினர் அனுமதி வழங்கவில்லை.

இதேவேளை, கச்சதீவு பகுதியில் கடற்கரையை சூழவும் காட்டு மரங்களே வளர்ந்திருந்தன.

ஆனால் தற்போது, கடற்படையினர் அரச மரங்களை கொண்டு வந்து குறித்த பகுதியில் வைத்துள்ளனர் என்பதும் அப்பட்டமாகத் தெரிவிகின்ற ஒரு விடயம்.

கச்சத்தீவு இலங்கை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.

கச்சத்தீவை இந்தியா – இலங்கைக்கு வழங்கும் போது அந்தோனியார் ஆலயத்துடனேயே வழங்கியது.

இவ்வாறான நிலையில், இலங்கை பொருளாதார ரீதியாக அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருந்த போது, பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாடுகள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ள போதும், இந்தியா வழங்கிய ஒத்துழைப்பை ஒருபோதும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

ஆகவே இவ்வாறான சிறுமைத்தனமான செயற்பாடுகள் இலங்கை இந்திய நல்லுறவில் பாரிய விரிசலாக உருவெடுக்கும் சந்தர்ப்பங்களும் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கச்சத்தீவில் அந்தோனியார் ஆலயம் மாத்திரமே இவ்வளவு காலமாக இருந்தது.

ஆனால் இப்போது அங்கே பெரிய புத்தர் சிலை எப்படி வந்தது என்பது விடைகாண முடியாத கேள்வியாகவுள்ளது.

இலங்கையில் இருப்பவர்களுக்கும் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கும் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு உரிய இடமென்று தெரியும்.

இருப்பினும் வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த அடையாளங்களை நிறுவி வருவதைப் போன்று கச்சதீவிலும் தற்போது பௌத்த சின்னத்தை நிறுவியுள்ளனர்.

கச்சத்தீவையும் விட்டுவைக்காத நிலைமையே தற்போது இருக்கின்றது.

ஆனால் கடற்படையினர் வழிபடுவதற்காக அது வைக்கப்பட்டது என்று இனி வரும் காலங்களில் பதில் வரலாம்.

குறித்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்வாறு இருப்பினும் அங்கு அமைக்கப்பட்ட பிரமாண்டமான புத்தர் சிலை எவ்வாறு கட்டப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து அதனை நிறுவியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் மத தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைபில் 360 பேர் கைது
செய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைபில் 360 பேர் கைது

May 12, 2025
வாழைச்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது
செய்திகள்

வாழைச்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது

May 12, 2025
முடிவுக்கு வரும் அமெரிக்க சீனா வர்த்தக போர்
உலக செய்திகள்

முடிவுக்கு வரும் அமெரிக்க சீனா வர்த்தக போர்

May 12, 2025
பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுக்க தயார்; மோடி
உலக செய்திகள்

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுக்க தயார்; மோடி

May 12, 2025
வாகன இறக்குமதி நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரிப்பு
செய்திகள்

வாகன இறக்குமதி நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரிப்பு

May 12, 2025
சில சபைகளை விட்டுக்கொடுக்கும்படி தமிழரசுக் கட்சியை கோரும் சித்தார்த்தன்
அரசியல்

சில சபைகளை விட்டுக்கொடுக்கும்படி தமிழரசுக் கட்சியை கோரும் சித்தார்த்தன்

May 12, 2025
Next Post
வடக்கு ஆளுநர் உருவாக்கிய சட்டங்களுக்கு எதிராக தீர்ப்பளித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம் !

வடக்கு ஆளுநர் உருவாக்கிய சட்டங்களுக்கு எதிராக தீர்ப்பளித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம் !

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.