லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பின்வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த விலை குறைப்பு இன்று (20) முதல் அமுலுக்கு வருகிறது.
- 1kg சோயா – 45 ரூபா குறைப்பு – புதிய விலை 580 ரூபா
- 1kg உள்ளூர் உருளைக்கிழங்கு – 40 ரூபா குறைப்பு- புதிய விலை 290 ரூபா
- 1kg நெத்தலி – 30 ரூபா குறைப்பு – புதிய விலை 1,100 ரூபா
- 1kg பூண்டு – 30 ரூபா குறைப்பு – புதிய விலை 620 ரூபா
- 1kg வெங்காயம் – 15 ரூபா குறைப்பு – புதிய விலை 195 ரூபா
- 1kg சிவப்பு பருப்பு – 6 ரூபா குறைப்பு- புதிய விலை 299 ரூபா