யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
ஆனைக்கோட்டை சாவல்காட்டு பகுதியில் வசிக்கும் பஸ் உரிமையாளர் நேற்று புதன்கிழமை (20) இரவு தனது வீட்டின் முன்பாக பஸ்ஸினை நிறுத்தி இருந்தார்.
இந்நிலையில், இன்று வியாழக்கிழமை (21) அதிகாலை பஸ் தீ பிடித்து எரிவதனை அவதானித்து தீயை அணைக்க முற்பட்ட போதிலும் பஸ் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பஸ் மின் ஒழுக்கு போன்ற காரணங்களால் தீ பிடித்ததா? அல்லது வன்முறை கும்பல்களின் நாசகார வேலையா? என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.