ஜனாதிபதி செயலகத்தின் பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தும் எந்தவொரு வாகனமும் ஜனாதிபதி செயலகத்துடன் இணைக்கப்பட்டதல்ல எனவும், அவை பொதுமக்களை ஏமாற்றும் போலியான முயற்சி எனவும் பதில் ஜனாதிபதி செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.