இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் காணி ஆணையாளர் விமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மட்டு. ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களாக என்னை பதவியில் இருந்து நீக்குவதற்கு இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் முழு மூச்சாக முயற்சி செய்து வந்தார்.
பல தடவைகள் அவருடைய சகாக்களுக்கு காணிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அதற்கு நான் மறுப்பு தெரிவித்த போது அவர் எனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டார்”- என்றார்.