அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக, கொழும்பின் சில பகுதிகளில் 12 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை மாலை 6 மணி முதல், நாளை மறுதினம் காலை 6 மணிவரையிலான 12 மணி நேரத்தில் கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது