Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹன்சிகாவின் மை திரி வெப் சீரிஸ்!

ஹன்சிகாவின் மை திரி வெப் சீரிஸ்!

3 years ago
in சினிமா, செய்திகள்

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராஜேஷ் M இயக்கத்தில் மிகவும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியிருக்கும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ‘மை3’ சீரிஸ், கடந்த 15 திகதி முதல் ஸ்ட்ரீமாகியிருந்தது. இந்த ஒரிஜினல் சீரிஸில் நடிகை ஹன்சிகா மோத்வானி, நடிகர்கள் முகேன் ராவ், சாந்தனு ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜனனி, ஆஷ்னா ஜவேரி, அபிஷேக், சக்தி, சுப்பு பஞ்சு அருணாச்சலம் உள்ளிட்டவர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் “மை3” வெப் சீரிஸ் இயக்குநர் ராஜேஷ் M இயக்கும் முதல் வெப் சீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஹாட்ஸ்டார் இந்த ஒரிஜினல் வெப்சீரிஸின் டிரெய்லரை கடந்த செவ்வாயன்று வெளியிட்டது. டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் இந்த வெப் சீரிஸுக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. நகைச்சுவை மற்றும் காதல் கலந்த கலவையாக அமைந்த டிரெய்லர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

முகேன், ஒரு பணக்கார பிஸினஸ்மேன். மனித தொடுதல் என்பது அவருக்கு ஒவ்வாமை. யாராவது அவரைத் தொட்டால் அவருக்கு அலர்ஜியாகி, தீவிரமாக பாதிப்புகுள்ளாகிவிடுவார்.. இளம் விஞ்ஞானியாக வரும் சாந்தனுவால் உருவாக்கப்பட்ட, மை3 என்ற மனித உருவ ரோபோவை வாங்க ஆர்வமாக இருக்கிறார். ஆனால் உருவாக்கத்தின் போது ஏற்பட்ட சிக்கலில் செயலிழந்து போன மை3 ரோபோவிற்கு பதிலாக சாந்தனுவின் உண்மையான முன்னாள் காதலி ஹன்சிகாவை அவரிடம் அனுப்புகிறார். முகேனை ஹன்சிகா சந்திக்கும் போது என்ன நடக்கிறது என்பது தான் இந்தக்கதை.

இந்த வெப் சீரிஸுக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளர் கணேசன் இசையமைத்துள்ளார். அஷிஷ் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார். இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மை 3” வெப் சீரிஸை Trendloud நிறுவனம் தயாரித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
பிரக்யான் ரோவரில் இருந்து எந்த சிக்னலும் இல்லை; நிலவில் என்ன நடந்தது!

பிரக்யான் ரோவரில் இருந்து எந்த சிக்னலும் இல்லை; நிலவில் என்ன நடந்தது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.