கிழக்கின் அவமானமான பிள்ளையான் என்னும் சந்திரகாந்தன், பல கொலைகளுக்கு காரணமான ஒருவர் இவர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்பு தொடர்பிலும் பல கொலைகள் தொடர்பிலும் அசாத் மெளலானாவினால் குற்றம் சாட்டப்பட்ட பெயர் குறிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை அவர்களுக்கான நடவடிக்கை என்ன? அவற்றினை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22.09.2023) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம், தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பல கொலைகள் உடன் சம்பந்தப்பட்ட திரிபோலி பிளட்டூன் (கூலிக்கு கொலை செய்யும் படைப்பிரிவு) அமைப்பினை சேர்ந்த பலர் இன்றும் சுகந்திரமாக உள்ளனர், அவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள இருக்கின்றது.
அவர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் இல்லையா? எமக்கும் கிழக்கில் இவர்களினால் அச்சுறுத்தல் எழலாம் என குறிப்பிட்டுள்ளார்.
மயிலத்தமடு, மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் பண்ணையளர்களினால் தொடர்ச்சியாக வீதி ஒரங்களில் கொட்டும் மழையிலும் வெயிலிலும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் கோரிக்கையை முன்வைத்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களுக்கான தீர்வினை அரசு உடனடியாக பெற்றுத்தர வேண்டும்.
கிழக்கு மாகாண திருகோணமலை மாவட்டத்தில் மூவின மக்களும் வாழ்கின்றார்கள். அரசு இனங்களுக்கு இடையில் குழப்பத்தினை ஏற்படுத்தி இன முறுகல் நிலைக்கு வித்திடாமல் அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்க்கொள்ள வேண்டும்.
அத்துடன் திருகோணமலையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் ஊர்வலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் தாக்கப்பட்டதற்கு பின்னால் இலங்கை இராணுவப் பிரிவினரின் திட்டமிட்ட செயல்.
அவர் ஒரு பாதையில் செல்வதாக இருந்தது பின்பு பாதை மாற்றப்பட்டு புதிய பாதை வழியே சென்று கொண்டிருந்தார். அது இராணுவப் புலனாய்வாளர்களுக்கு மட்டுமே தெரிந்து இருந்தது. இதிலிருந்து எமக்கு சந்தேகம் வருகின்றது இது தாக்குதலுக்கு இவர்களே காரணம் என குற்றம்சாட்டி உள்ளார்.அத்துடன் திருகோணமலையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் ஊர்வலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் தாக்கப்பட்டதற்கு பின்னால் இலங்கை இராணுவப் பிரிவினரின் திட்டமிட்ட செயல்.
அவர் ஒரு பாதையில் செல்வதாக இருந்தது பின்பு பாதை மாற்றப்பட்டு புதிய பாதை வழியே சென்று கொண்டிருந்தார். அது இராணுவப் புலனாய்வாளர்களுக்கு மட்டுமே தெரிந்து இருந்தது. இதிலிருந்து எமக்கு சந்தேகம் வருகின்றது இந்த தாக்குதலுக்கு இவர்களே காரணம் என குற்றம்சாட்டி உள்ளார்.