அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அண்மித்ததாக இருந்த மரம் குடைசாய்ந்து வீதிக்கு குறுக்காக விழுந்து உள்ளது.
இதன் போது குறித்த பாதையால் பயணித்துக் கொண்டிருந்த கார் மீது மரம் விழுந்துள்ளது.
இதன் போது காரில் பயணித்தவருக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளதுடன் சிறிது நேரம் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான காணொளி ஒன்றும் முகநூலில் பகிரப்பட்டு வருகிறது.