பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராடுவது ஊடாக வடக்கில்
காணிப்பிரச்னை, இராணுவ மாயக்கல் பிரச்னை, வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் ஏனைய பிரச்னைகள் தீர்ப்பதற்கான முதற் படியாக அமையுமென அனைத்து பல்கலைக்கழக மாணவர்
ஒன்றியத்தின் எற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்கவேண்டும், மக்கள் சக்தியை கட்டியெழுப்புதல் தொடர்பான பொதுக்கருத்தரங்கு
நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கின் பிரச்னையை அறியும் தெற்கு மனிதர்களும், தெற்கின் பிரச்னையை அறியும் வடக்கு மனிதர்களும் உருவாக்கப்பட வேண்டும். அதுவே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு. அதற்கான முதற்கட்டமாகவே கருத்தரங்கு யாழில்
இடம்பெற்றுள்ளது.
பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கவேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும்
என்பதே ஆணித்தரமான எமது நிலைப்பாடு. தற்போது அரசாங்கம் புதிதாகச் சட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதில் போராட்டங்களின்போது சமூக ஊடங்களின் மூலம் அரசுக்கு எதிராகச் செயற்பட முடியாது என்பதைக் கொண்டுவந்துள்ளனர் – என்றார்.