தீப்பற்றி எரிந்த தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை!
திருகோணமலை – தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே தீப்பற்றி உள்ளன.
இன்று காலை 6 மணியளவில் சத்தமொன்று கேட்டதாகவும் பின்னர் தீப்பற்றியதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.
திடீர் மின்னொழுக்கினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதில் பல தரப்பட்ட மருந்துப் பொருட்கள், ஆய்வு கூட உபகரணங்கள் பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் தீக்கிரையாகியுள்ளன.
திருகோணமலை தீயணைக்கும் பிரிவு, முள்ளிப்பொத்தானை திஸ்ஸபுர இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.