சைவ மக்களின் தொன்மைகளை அழிக்கும் செயல் தொடர்கிறது. திட்டமிட்டு நடைபெறும் இவ்வாறான செயல்களை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது. நெடுங்கேணி – ஆதி லிங்கேஸ்வரர் சிவன் ஆலயம் அழிக்கப்பட் டமைக்கு கண்டனம் தெரிவித்து அந்த அமைப்பின் உபதலைவர் ஆறு. திரு முருகன் நேற்று விடுத்த கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டது.
அதில், “சைவ மக்களின் தொன்மைகளை அழிக்கும் செயல்பாடு தொடர்கிறது. இது திட்டமிட்டு நடைபெறுகிறது. அரசாங்கம் இத்தகைய செயல்களை நிறுத்த வேண்டும். தொல்லியல் திணைக களம் ஆதி சைவக் கோவில்களை சைவ மக்கள் பராமரிப்பதற்கு தொடர்ந்து இடையூறு செய்வது வேதனைக்குரியது. விக்கிரகங்களை உடைத்தமை குறித்து ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலயத் திருப்பணி நடைபெறுவதற்கு இந்து கலாசாரத் திணக்களம் உரிய அனுமதிகளை வழங்க
வேண்டும்.
தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். தொடர்ந்து சைவ சமயத்துக்கு வரும் இன்னல்களை போக்குவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – என்றுள்ளது.