ஏறாவூர் மிச் நகர் சந்தி புகையிரத கடவையில் முச்சக்கர வண்டி ஒன்று ரயிலுடன் மோதுண்டத்தில் சம்பவ இடத்தில் ஆட்டோ சாரதி உயிரிழந்துள்ளார்.
அப்துல் றகுமான் ரமீஸ் என்னும் 38வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து இன்று காலை 11:30 மணியளவில் மகா ஓயா நோக்கி பயணித்த ரயிலிலேயே முச்சக்கரவண்டி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.