Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஏ.ஐ அம்சம்!

கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஏ.ஐ அம்சம்!

3 years ago
in செய்திகள், தொழில்நுட்பம்

கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை தனது சேவைகளில் சேர்க்க சைலென்டாக வேலை செய்துவருகிறது. ஆனால் அதன் போட்டியாளராக உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை அதன் (Bing) பிங் சர்ச் எஞ்சினில் சேர்த்திருக்கிறது. இதனால் கூகுள் சர்ச் எஞ்சினிலும் அந்த வசதி அறிமுகம் ஆகியிருக்கிறது.

கூகுள் எஸ்ஜிஇ (Google SGE) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வசதியின்படி, கூகுளில் தேடும்போது பயன்படுத்தும் குறிப்புச் சொற்கள் அடிப்படையில் கூகுள் தானே படங்களை உருவாக்கியத் தரும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த அம்சம் ஏற்கெனவே Bing (பிங்) சர்ச் எஞ்சினில் உள்ளது.

இதன் மூலம் தேடும் சொற்களுக்கு ஏற்ப படங்களை உருவாக்கும் திறன் கூகுள் சர்ச் எஞ்சினுக்குக் கிடைத்துள்ளது. ஒரு பயனர் ஏதேனும் ஒன்றைத் தேடும்போது, தேடும் சொற்களை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான படங்கள் உருவாக்கப்படும், எடுத்துக்காட்டாக, தொப்பி அணிந்து சமையல் செய்யும் குதிரை என்று தேடினால் – கூகுள் AI மூலம் உருவாக்கப்பட்ட நான்கு படங்களைக் காட்டும்.

“அந்த படங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்தால், தேடலில் பயன்படுத்திய குறிப்புச் சொற்களை விளக்கமான விவரங்களுடன் AI எவ்வாறு படமாக மாற்றுகிறது என்று தெரிந்துகொள்ளலாம்” என்று கூகுள் கூறுகிறது. அதைத் திருத்தி, கூடுதல் விவரங்களையும் சேர்த்து சேர்த்து படங்களை விரும்பம் போல மேலும் மாற்றி அமைக்கலாம்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக SGE மூலம் உருவாக்கப்படும் ஒவ்வொரு படமும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் வகையில் படங்களில் மெட்டாடேட்டா லேபிள் இருக்கும். வாட்டர்மார்க்கும் சேர்க்கப்பட்டிருக்கும் என்று கூகுள் கூறியுள்ளது.

SGE வசதியை பயன்படுத்த 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அமெரிக்காவில் மட்டும் AI மூலம் படத்தை உருவாக்கும் வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதுவும் இப்போதைக்கு இந்த வசதி ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
இலங்கையில் மர்ம ஒலியால் பரபரப்பு; பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்ட மக்கள்!

இலங்கையில் மர்ம ஒலியால் பரபரப்பு; பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்ட மக்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.