கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பாரியளவில் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் தொகையுடன் 5 சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அரச புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கமையவே குறித்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது போதைப்பொருளுடன் கைதான சந்தேகநபர்கள் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.