Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இனி வாட்ஸ் ஆப் வேலை செய்யாத ஸ்மாட் தொலைபேசிகளின் பட்டியல் வெளியானது!

இனி வாட்ஸ் ஆப் வேலை செய்யாத ஸ்மாட் தொலைபேசிகளின் பட்டியல் வெளியானது!

3 years ago
in செய்திகள், தொழில்நுட்பம்

உலகின் முக்கியமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்ப் சில குறிப்பிட்ட மொபைல்களில் வேலை செய்யாது என்ற அதிர்ச்சியான அறிவிப்பு இப்போது வந்துள்ளது. இப்போது முக்கிய தகவல் பரிமாற்றம் அனைத்துமே வாட்ஸ்அப் வழியாகத் தான் நடக்கிறது. குறிப்பாகக் கல்லூரிகள், வேலை செய்யும் நிறுவனங்கள் முக்கிய தகவல் தொடர்பு சாதனமாக வாட்ஸ்அப் தான் இருக்கிறது. வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ச்சியாகப் பல அப்டேட்களை கொடுத்து வருகிறது. சந்தையில் நிலவும் போட்டியைச் சமாளிக்கவும் யூசர்களை தக்க வைக்கவும் புது புது வசதிகளை வழங்குகிறது.

இதற்கிடையே வாட்ஸ்அப் நிறுவனம் இப்போது பழைய செல்போன்களுக்கான ஆதரவை நிறுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அந்த மாடல்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் நிறுவனம் நிறுத்தியுள்ளது. பழைய ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கான ஆதரவை வாட்அஸ்ப் நிறுத்துகிறது. இனி குறிப்பிட்ட மொபைலை வைத்திருப்போரால் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே இந்த மாடல்களில் வாட்ஸ்அப் வேலை செய்வதில்லை என்ற கூறப்படுகிறது. அதாவது ஆண்ட்ராய்டு 4.4, அதாவது கிட்கேட் மாடலை வைத்திருப்போர் இனிமேல் அவர்கள் மொபைலில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது. தற்போது வாட்ஸ்அப் வெளியிட்ட தகவல்களின்படி குறைந்த எண்ணிக்கையிலான மொபைல்கள் மட்டுமே ஆண்ட்ராய்டு கிட்கேட்டில் இயங்கி வந்தன. அவற்றுக்கான சப்போர்ட் நிறுத்தப்பட்டுள்ளது. வேலை செய்யாது: அதாவது இனிமேல் அவர்கள் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்றால் அவர்களின் ஒரே ஆப்ஷன் புதிய மொபைலை வாங்குவது மட்டுமே. தற்போது நீங்கள் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்றால் குறைந்தது ஆண்ட்ராய்டு 5.0, அதாவது லாலிபாப் வெர்ஷன் அல்லது அதற்குப் பிறகு வந்த ஆண்ட்ராய்டு பதிப்பை நீங்கள் வைத்திருக்க வேண்டும். அதற்கு முந்தைய வெர்ஷன்களில் வாட்ஸ்அப் இனி வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு கிட்கேட் வெர்ஷன் கடந்த 2013ஆம்ந ஆண்டு வெளியிடப்பட்டது.. அதாவது இந்த ஆண்ட்ராய்டு வேர்ஷனில் சுமார் 10 ஆண்டுகள் வாட்ஸ்அப் வேலை செய்து வந்துள்ளது.. வாட்ஸ்அப் செயலியை இப்போது பயன்படுத்துவோரில் 0.5 சதவீதம் முதல் 0.7 சதவீதம் பேர் மட்டுமே இப்போதும் அந்த பழைய கிட்கேட் ஆண்டராய்டு வெர்ஷனை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அடுத்த குறைந்தது வெர்ஷனுக்கு அப்கிரேட் ஆனால் மட்டுமே அவர்கள் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த முடியும். என்ன காரணம்: வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த காலங்களிலும் இதுபோல பழைய ஆண்டிராய்டு வெர்ஷன் மாடல்களுக்கான சப்போர்ட்டை நிறுத்தி உள்ளது. இதை வாட்ஸ்அப் நிறுவனம் வழக்கமான செயல்முறையாகவே செய்து வருகிறது. பழைய ஆண்டிராய்டு வெர்ஷன்களில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த முடியாது என்பதே இதற்கான முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.

நெக்சஸ் 7, ஹெச்டிசி ஒன், சாம்சங் கேலக்ஸி 2, LG Optimus G Pro, சோனி எக்ஸ்பீரியா இசட், சாம்சங் கேலக்ஸி நெக்சஸ், சாம்சங் கேலக்ஸி S2, சோனி எக்ஸ்பீரியா எஸ்2, மோட்டோரோலா ஜூம், சாம்சங் கேலக்ஸி டேப் 10, சாம்சங் கேலக்ஸி எஸ் உள்ளிட்ட மொபைல்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது. இது மட்டுமின்றி ஆண்ட்ராய்டு கிட்கேட்டில் இயங்கும் அனைத்து மொபைல் மாடல்களிலும் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்றே அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த மொபைல்களில் எதாவது ஒரு மாடலை பயன்படுத்தி வந்தால்.. இனிமேல் உங்களுக்கு வாட்ஸ்அப் வேலை செய்யாது. நீங்கள் அடுத்த வெர்ஷனுக்கு கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும். பெரும்பாலும் அந்த மாடல்களுக்கு அடுத்த வெர்ஷன் அப்டேட் கிடைக்காது. எனவே, உங்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் புது மாடலை வாங்குவது மட்டுமே.

தொடர்புடையசெய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு
செய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

July 24, 2026
வவுணதீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!
செய்திகள்

வவுணதீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!

July 24, 2026
இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்
காணொளிகள்

இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்

July 24, 2026
EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!

July 24, 2026
திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது
செய்திகள்

திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது

July 24, 2026
ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!
செய்திகள்

ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!

July 24, 2026
Next Post
தமிழ் தேசிய தரப்புகளின் நிலைமை தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடுமா?

தமிழ் தேசிய தரப்புகளின் நிலைமை தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிடுமா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.