பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு என்று அ.தி.மு.க. கூறுவது நம்ப முடியாத நாடகம் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதய
நிதி நேற்று தேனி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன்போது அவர்
உரையாற்றுகையில், தி.மு.க. இளைஞரணியின் 2 ஆவது மாநில மாநாடு டிசம்பர் 17 ஆம் திகதி சேலத்தில் நடைபெற உள்ளது.
ஒரு மாநாடு எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இது அமையும். ஆனால் மதுரையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு மாநாடு நடை பெற்றது. ஒரு மாநாடு எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு உதாரணமாக அது அமைந்து விட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதி இருக்கும் வரை நீட் தேர்வுவரவில்லை.
பா.ஜ.க. பின்னணியில் செயல்பட்ட அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போதுதான் நீட் தேர்வு வந்தது. இதுவரை 22 பேர் நீட்தேர்வு காரணமாக உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்ய இரண்டு முறை மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது. தற்போது நீட் விலக்கை மக்கள் இயக்கமாக மாற்ற 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க இருக்கிறோம். அதை சேலம் மாநாட்டில் முதல்வரிடம் ஒப்படைப்போம். ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் தலா 5 லட்சம் ரூபா செலுத்துவோம் என்று கூறிய பா.ஜ.க.அதைச் செயல்படுத்தவில்லை.ஆனால் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். குடும்ப ஆட்சி என்று எங்களைக் குறை கூறுகிறார்கள்.
தமிழகமே எங்கள் குடும்பம்தான். அந்த அடிப்படையில்தான் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு என்று அதிமுக கூறுவது நம்ப முடியாத வெறும் நாடகம் என்று தெரிவித்துள்ளார்