Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாடு ஒன்றிலிருந்து நாடு கடத்தப்பட்ட 28 இலங்கையர்கள்!

வெளிநாடு ஒன்றிலிருந்து நாடு கடத்தப்பட்ட 28 இலங்கையர்கள்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

குவைத்தில் நீண்ட காலமாக விஸா இன்றி, சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 28 பேர் கொண்ட குழுவினர் இன்று (27) குவைத்திலிருந்து, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

மேற்படி குழுவினர் இன்று (27) காலை 06.30 மணியளவில் குவைத்தில் இருந்து UL-230 எனும் இலக்கமுடைய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்களில் 24 வீட்டுப் பணிப்பெண்களும் 04 வீட்டுப் பணியாளர்களும் அடங்குவதுடன், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தமது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தால் போக்குவரத்து செலவுக்காக தேவையான பணத்தையும் வழங்கியுள்ளனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக குவைத்தில் தொழில்புரிந்த நிலையில் வருகை தந்தவர்கள், இலங்கைக்கு வருவதற்காக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்தவர்கள் எனவும், இந்த இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு தூதரக அதிகாரிகளுடன் இணைந்து அந்நாட்டின் பொலிஸார், குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நீதிமன்றத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!
செய்திகள்

மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

October 22, 2026
இன்று முதல் மின்வெட்டு இல்லை; தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் அறிவிப்பு!
செய்திகள்

இன்று முதல் மின்வெட்டு இல்லை; தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் அறிவிப்பு!

October 22, 2026
கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!
செய்திகள்

கிராண்ட்பாஸில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண்  ஒருவர் கைது!

October 22, 2026
ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
செய்திகள்

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

October 22, 2026
போரை தற்காலிகமாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவு; உக்ரைன் ஜனாதிபதி!
உலக செய்திகள்

போரை தற்காலிகமாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஆதரவு; உக்ரைன் ஜனாதிபதி!

October 22, 2026
நாட்டில் மழை மேலும் தீவிரமடையும்; ஒக்டோபர் 27 வரை தொடரும் என எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டில் மழை மேலும் தீவிரமடையும்; ஒக்டோபர் 27 வரை தொடரும் என எச்சரிக்கை!

October 22, 2026
Next Post
அம்பிட்டியவை கைது செய்ய இலங்கை சட்டத்தில் இடமில்லையா? ; மனோ கேள்வி!

அம்பிட்டியவை கைது செய்ய இலங்கை சட்டத்தில் இடமில்லையா? ; மனோ கேள்வி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு