Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை இந்துக் கல்லூரி தேசிய பாடசாலையின் நடைபவனி!

வாழைச்சேனை இந்துக் கல்லூரி தேசிய பாடசாலையின் நடைபவனி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வாழைச்சேனை இந்துக் கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலையின் அதிபர் திருமதி.ரி.சுரேஸ் குமார் தலைமையில் நடைபெற்ற நடைபவனியில் பாடசாலையில் மூத்த கல்வியியலாளர்கள், பாடசாலையில் கடமையாற்றிய முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கேக் வெட்டப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் பாடசாலையில் கடமையாற்றி மரணமடைந்த அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது வாழைச்சேனை இந்துக் கல்லூரி தேசிய பாடசாலையின் மைதானத்தில் இருந்து ஆரம்பமான நடைபவனி கல் குடாவீதி வழியாக வாழைச்சேனை பிரதான வீதி, முல்லை வீதி, விநாயகபுரம் வீதி வழியாக பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலய வீதி, பேத்தாழை மயான வீதி வழியாக பேத்தாழை கல்குடா வீதியினூடாக வருகை தந்து வாழைச்சேனை இந்துக் கல்லூரி தேசிய பாடசாலையை வந்தடைந்தது.

குறித்த நடைபவனியில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையின் பான்ட் மாணவர்களின் வரவேற்புடன், பாடசாலையின் கராத்தே மாணவர்கள், சுற்றாடல் பகுதி, மாணவ தலைவர்கள், சகிதம் பவனியாக கலந்து கொண்டனர்.

அத்தோடு 1996 ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்கள் தொடக்கம் 2022 ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்கள் வரையான மாணவர்களால் வாகனங்கள் கண்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததுடன் இசை முழங்க பழைய மாணவர்களின் வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் நடனமாடி பழைய மாணவர்கள் நடைபவனியில் கலந்து கொண்டனர்.

குறித்த நடைபவனியைப் பார்வையிடுவதற்கு பெரும்பாலான மக்கள் வீதியோரமாக குழுமி நின்றனர். அவர்கள் நடைபவனியை பார்வையிட்டு மகிழ்ந்ததுடன், கடந்த வருடமும் இதே நாளில் பாடசாலை தினத்தினை முன்னிட்டு நடைபவனி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
மனித பாவனைக்குதவாத வெங்காயத்தை கொண்டு சென்றவர் கைது; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

மனித பாவனைக்குதவாத வெங்காயத்தை கொண்டு சென்றவர் கைது; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு