மலையக மக்களுக்காக இலங்கையில் மேலும் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படுமென இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மலையகம் 200 நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை பெருமை படுத்தும் முகமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் மலையகம் நாம் 200 நிகழ்வு தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.