தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி வைத்திய கலாநிதி விஜித் குணசேகர பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் எட்டு உறுப்பினர்கள் எடுத்த கூட்டு முடிவின் அடிப்படையில் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர், சுகாதார அமைச்சில் உள்வாங்கப்படவுள்ளார் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி தரமற்ற மனித நரம்பு வழி இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் குணசேகர சர்ச்சைக்கு உட்பட்டிருந்தார்.
இந்தநிலையில் போலியான ஆவணங்களை தயாரித்து தரமற்ற மனித நரம்பு வழி இம்யூனோகுளோபுலினை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின்பேரில், விஜித் குணசேகர, சுகாதார அமைச்சின் வழங்கல் பிரிவு பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க மற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டது.
இதற்கிடையில் விஜித் குணசேகர அண்மையில், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின்; பல முக்கிய ஆவணங்களை அழித்ததாக அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கத்தினால் கூறப்பட்டது.
இதேவேளை அவரை பதவி விலகும்படி கேட்கப்பட்டபோதும், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் .