மட்டக்களப்பில் நடைபெற்று வரும் மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் தொடர் அறவழிப் போராட்டம் 55 ஆவது நாளாக தொடர்கிறது. இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று பொத்துவில் தொடக்கம் பலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயத்தின் இணைப்பாளர்களின் ஒருவரான தவத்திரு வேலன் சுவாமிகள் பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களுக்கு நீதி வேண்டியே தவத்திரு வேலன் சுவாமிகள் மேற்கொள்ளும் இவ் உண்ணா விரத போராட்டம் மூன்று நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போராட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்களான ருக்கி பெனாண்டோ,மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் சிவயோகநாதன் மற்றும் தென்னிலங்கையை சேர்ந்த சகோதர இன ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.