மக்களிடமிருந்து மில்லியன் கணக்கான பணத்தை இணையத்தளம் மூலம் மோசடி செய்த சீன பிரஜைகள் 39 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர் .
தூதரகங்கள் ஊடாக பெறப்பட்ட முறைப்பாடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சீனப் பிரஜைகள் , இன்று (01) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அளுத்கம களுவாமோதர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வாடகை அடிப்படையில் பல மாதங்களாகத் அவர்கள் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு அளுத்கம பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கணினிகள், மதிப்பு மிக்க திறன்பேசிகள் மற்றும் பெருந்தொகை பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.